
லாரா தத்தாவின் இந்திரா காந்தி அவதாரம் : பின்னணியில் ஆச்சரிய தகவல்
ஒருபக்கம் இந்திராகாந்தியின் ஒப்பனை சரியாக பொருந்தி விட்டது என்றாலும் உருவத்திலும் சரி நடிப்பிலும் சரி இந்திராகாந்தி குறித்த சிறு சிறு நுணுக்கமான விஷயங்களை கூட லாரா தத்தா மிகச்சரியாக செய்வதற்கு உதவியது லாராவின் தந்தை கொடுத்த பல தகவல்கள் தானாம். லாராவின் தந்தை இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவரது பர்சனல் விமான பைலட்டாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், அவரை அருகில் இருந்து கவனித்தவர் என்கிற முறையில் லாரா தத்தா இந்திராகாந்தியின் கதாபாத்திரத்தை மிகச்சரியாக பிரதிபலிப்பதற்கு உதவியுள்ளார் அவரது தந்தை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!