திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஹரி. சாமி, சிங்கம் படங்களின் மூலம் புகழ் பெற்றவர். அருண் விஜய் நடிப்பில் 'யானை' படத்தை இயக்கியவர் தற்போது விஷால் நடிக்கும் 'ரத்னம்' படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான ப்ரீத்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர்களில் மூத்தவர் ஸ்ரீராம் ஹரி தந்தையை போலவே சினிமா இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். அதற்கான பயிற்சி எடுத்து வந்தார். இந்த நிலையில் அவா 'ஹம்' என்ற குறும்படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். அதோடு அதில் நடித்தும் உள்ளார். ஒரு மணி நேரம் ஓடும் இந்தப் படம் யு-டியூப்பில் வெளியாகி உள்ளது. சஞ்சய்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் கார்மெலஸ் இசையமைத்து உள்ளார்.
படம் பற்றி ஸ்ரீராம் ஹரி கூறும்போது “இந்த படம் மட்டுமல்ல இன்னும் சில குறும்படங்களை இயக்கி இருக்கிறேன். பெரிய படம் பண்ணலாம் என்று நினைத்து உருவாக்கியதுதான் 'ஹம்'. இதனை பைலட் பிலிம் என்றும் சொல்லலாம். இது என்ன ஜானர் படம் என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. இன்றைய இளைஞர்களின் மனநிலையை சொல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட படம் இது. இந்த படத்தை திரைப்படமாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளேன்'' என்றார்.