மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தில் நடித்த நாகார்ஜூனா, அப்படத்திற்கு பின்னர் தயாரிப்பாளராக பிசியாகவுள்ளார். தனது மூத்த மகன் நாகசைதன்யா நடிப்பில் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் திரைப்படம் தனது இளைய மகன் அகில் நடிப்பில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கும் திரைப்படம் போன்ற படங்களில் தயாரிப்பாளராக பணியாற்றும் நாகார்ஜூனா, ராஜூ ஹாரி ஹாதி -2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். தற்போது பாண்டிச்சேரியில் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகளில் பங்கேற்பதற்காக நாகார்ஜூனாவும் பாண்டிச்சேரி சென்றுள்ளார். பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ஒமர் இயக்கும் ராஜூ ஹாரி ஹாதி-2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் அண்மையில் முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு பாண்டிச்சேரி சென்றுள்ளது. நடிகை சமந்தாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.