நான் ரொம்ப பிட் தான் - சமந்தா அதிரடி தோற்றம் | ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கி யுஏஇ அரசு கவுரவிப்பு | தனி ஒருவன் 2ம் பாகத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர்? | மீண்டும் ஜோடி சேரும் அஜித் - நயன்தாரா ஜோடி | விஜய்க்கு நான் யார்? : ரகசியம் உடைத்த வைபவ் | விஜய் தேவரகொண்டாவுக்காக டப்பிங் பேசிய தம்பி | லூசிபர் 2 ரிலீஸ் எப்போது? ; மோகன்லால் தகவல் | எம்ஜிஆர் - சிவாஜிக்கே செட்டாகாத போது எனக்கு மட்டும் எப்படி? ராமராஜன் கேள்வி | 'இந்தியன் 2' இசை விழாவில் ரஜினிகாந்த், ராம் சரண்? | தெலுங்கு, தமிழில் அனிருத்தின் அடுத்தடுத்த அதிரடி |
பாரத பிரதமர் நரேந்திர மோடி லட்சத் தீவிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். அந்த வீடியோ, போட்டோ சமீபத்தில் வெளியானது. இதனை மாலத்தீவு அமைச்சர்கள், எம்.பிக்கள் விமர்சனம் செய்தனர். பிரதமரை அவதூறு செய்து கருத்துக்களை வெளியிட்டனர். இதற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. மாலத்தீவு பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் பலர் வற்புறுத்தினர். இதையடுத்து இந்தியர்கள் மாலத்தீவு செல்வதையும், அங்கு ஓட்டல்களில் முன்பதிவு செய்து இருந்ததையும் ரத்து செய்தனர்.
இந்த நிலையில் நடிகர் நாகார்ஜுனாவும் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் பிக்பாஸ் மற்றும் படப்பிடிப்புகளில் தொடர்ந்து பிசியாக இருந்ததால் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க மாலத்தீவு செல்ல இருந்தேன். தற்போது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டேன். பயத்தினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இதை செய்யவில்லை. நமது பிரதமரை அவர்கள் தவறாக பேசியதை ஏற்க முடியாது. இதற்கான பின் விளைவுகளை மாலத்தீவு சந்தித்து வருகிறது. இதனாலேயே நானும் பயணத்தை ரத்து செய்தேன். மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்தீவு செல்ல இருக்கிறேன்'' என்றார்.