Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

இறா (மலையாளம்)

இறா (மலையாளம்),IRA
  • இறா (மலையாளம்)
  • இயக்குனர்:
20 மார், 2018 - 18:18 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » இறா (மலையாளம்)

நடிகர்கள் : உன்னி முகுந்தன், கோகுல் சுரேஷ், மியா ஜார்ஜ், லேனா, அலான்சியர் லே, பாஷாணம் ஷாஜி
ஒளிப்பதிவு : சுதீர் சுரேந்திரன்
இசை : கோபிசுந்தர்
டைரக்சன் : சைஜூ எஸ்.எஸ்

மருத்துவமனையில் ரெகுலர் செக்கப்பிற்காக செல்லும் மத்திய அமைச்சர் அலான்சியர் லே, அங்கே திடீர் ஹார்ட் அட்டாக்கில் மரணமடைகிறார். அவருக்கு செக்கப் செய்த ஜூனியர் டாக்டர் கோகுல் சுரேஷ் தான், ஹார்ட் அட்டாக்கை வரவழைக்கும் மருந்தை செலுத்தி அமைச்சரை கொன்றதாக கூறி போலீஸ் அவரை கைது செய்கிறது. இதனை விசாரிக்க டில்லியில் இருந்து வருகிறார் போலீஸ் அதிகாரியான உன்னி முகுந்தன்.

விசாரணையில் அமைச்சரின் தம்பி மகள், கோகுல் சுரேஷை காதலித்தது தெரியவர அதன் காரணமாக கோகுலை சிக்கவைக்க இப்படி ஒரு சதி நடந்திருக்கலாமோ என ஆராய்கிறார் உன்னி முகுந்தன். இறுதியில் கோகுல் சுரேஷின் காதலியின் தந்தை தான் குற்றவாளி என உணர்த்தி, அந்த பெண் பல வருடங்களாக பிரிந்து வாழும் அவரது அம்மாவான லாயர் லேனாவின் உதவியால் கோகுல் சுரேஷை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கிறார் உன்னி முகுந்தன்.

ஆனால் இந்த கொலையை செய்தது கோகுல் சுரேஷ் தான் என்கிற எதிர்பாராத உண்மையையும் கடைசியில் நம்மிடம் உடைக்கிறார்கள். கோகுல், அமைச்சரை கொலை செய்யவேண்டிய காரணம் என்ன, கொலை செய்யாத அப்பாவி போல நாடகமாட வேண்டிய காரணம் என்ன, அவர் கொலை செய்தது தெரிந்தும் போலீஸ் அதிகாரியான உன்னி முகுந்தன் அவரை காப்பாற்ற வேண்டிய காரணம் என்ன என்பதற்கு படத்தில் இடம்பெறும் மிக முக்கியமான பிளாஸ்பேக் விடை சொல்கிறது.

ஒரு த்ரில்லருக்கு உண்டான அத்தனை அம்சங்களும் இந்தப்படத்தில் உள்ளன. போலீஸ் அதிகாரியாக வரும் உன்னி முகுந்தனின் அலட்டல் இல்லாத உடல்மொழியும், விசாரணையை அவர் நடத்தும் விதமும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. குறிப்பாக பிளாஸ்பேக்கில் அவருக்கும் மியாவுக்குமான காட்சிகள் அழகான ஹைக்கூ.

சுரேஷ் கோபியின் மகன் என்கிற அடையாளம் கோகுல் சுரேஷ் முகத்தில் இருப்பது அவருக்கு கொஞ்சம் பலம்.. நிறைய பலவீனம்.. இதில் அதை தாண்டிவர கொஞ்சம் முயற்சித்து ரசிகர்களுக்கு சற்று நெருக்கமாகி இருக்கிறார்.

காட்டுவாசி பெண்ணாக வந்து அதிலும் ட்விஸ்ட் வைக்கும் மியா ஜார்ஜின் பாத்திர வடிவமைப்பு சுவாரஸ்யம். பாஷாணம் ஷாஜி மற்றும் உன்னி முகுந்தனிடம் ட்ரைவராக வரும் நபர் என அந்த இரண்டு பேருமே அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.

சுதீர் சுரேந்திரனின் ஒளிப்பதிவில் பிளாஸ்பேக்கில் வரும் காடு சம்பந்தப்பட்ட காட்சிகள் ஜிலுஜிலு. கோபிசுந்தரின் பின்னணி இசை பரவாயில்லை. அமைச்சர் மரணத்தின் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் காரணமும் ஏற்கும் விதமாகவே இருக்கிறது. அதை சுற்றி பல ட்விஸ்ட்டுகளைலை பின்னியிருப்பதன் மூலம், இடைவேளைக்கு பின்னும் எதிர்பார்ப்புடன் படம் பார்க்க நம்மை உட்கார வைக்கிறார் அறிமுக இயக்குனர் சைஜூ எஸ்.எஸ்

மொத்தத்தில் கொடுத்த காசுக்கு குறைவைக்காத ஒரு த்ரில்லர் தான் இந்த 'இறா'.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in