நடிகர்கள் : ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர், நஸ்ருதின் ஷா
இயக்கம் : ஷாத் அலி
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‛ஓ காதல் கண்மணி படம், ஹிந்தியில் ஆதித்யா ராய் கபூர் - ஸ்ரத்தா கபூர் நடிக்க, ஷாத் அலி இயக்கத்தில் ‛ஓகே ஜானு என்ற பெயரில் ரீ-மேக்காகி வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா... என்று இனி பார்ப்போம்...!
கதைப்படி, ஆதித்யா எனும் ஆதித்யா ராய் கபூர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு அமெரிக்காவில் செட்டிலாக வேண்டும் என்பது கனவு. இவரைமாதிரியே ஆர்க்கிடெக்ட்டான தாரா எனும் ஸ்ரத்தா கபூர், பாரீஸ் போய் செட்டிலாக வேண்டும் என்ற கனவு. இருவரும் ஒரு நாள் ரயில் நிலையத்தில் சந்திக்கிறார்கள். பார்த்த மாத்திரத்திலேயே இருவருக்குள்ளும் காதல் மலர, கல்யாணம் பண்ணாமலே தன் மனைவியுடன் வாழும் கோபி ஸ்ரீவட்சவா எனும் நஸ்ருதின் ஷா வீட்டில் லிவ் இன் டுகெதர் வாழ்க்கை வாழ்கிறார்கள். மனைவி மீது நஸ்ருதின் காட்டும் பாசம் ஆதித்யா-ஸ்ரத்தா இருவரையும் நெகிழ்ன்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் எதிர்பார்த்த யு.எஸ்., பாரீஸ் வாழ்க்கை தேடி வருகிறது. கிடைத்த வாழ்க்கையை பிடித்துக்கொண்டு திட்டமிட்டபடியே இருவரும் பிரிந்து சென்றனரா? அல்லது ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து சேர்ந்தே வாழ்ந்தார்களா...? என்பது ஓகே ஜானு படத்தின் மீதிக்கதை!
இன்றைய நாகரீக யுவ - யுவதிகளாக பக்கவாக பொருந்தி நடித்திருக்கிறார்கள் ஆதித்யாவும், ஸ்ரத்தாவும். காதலில் இருவரும் கசிந்து உருகும் காட்சிகள் இளைஞர்களை வெகுவாக கவர்கிறது. இவர்களை போலவே நஸ்ருதின் ஷாவும் தன் நடிப்பால் அனைவரையும் கவருகிறார். உடல்சுகவீனம் இல்லாத தன் மனைவி மீது அவர் காட்டும் பரிவும், பாசமும், காதலும் நெகிழ செய்கிறது.
தமிழை போலவே ஹிந்தியிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் ரசிகர்களை துள்ளல் இட செய்கிறது. அதிலும் பம்பாய் படத்தில் இடம்பெற்ற ஹம்மா ஹம்மா பாடலை கொஞ்சம் ஓகே ஜானுவில் ரீ-மேக்ஸ் செய்து கொடுத்திருப்பது ரசிகர்களை புது அனுபவத்தை தருகிறது. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு ஓவியம், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பக்கா.
ஓ காதல் கண்மணி படத்தை ஷாத் அலி அப்படியே ரீ-மேக் செய்திருப்பதால் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்றபடி ஆங்காங்கு கொஞ்சம் மசலாவை தூவி ரசிகர்களுக்கு கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர். இருந்தாலும் படத்தின் முதல்பாதி மெதுவாக நகருவது ரசிகர்களை கொஞ்சம் போர் அடிக்க செய்கிறது. மற்றபடி இளைஞர்களுக்கு பிடிக்கும் படமாக இயக்கிருக்கிறார் ஷாத் அலி.
ஒரு அழகிய காதல் கதையுடன், தாலிக்கட்டாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரத்தையும் மைப்படுத்தி வெளிவந்துள்ள இந்த ‛ஓகே ஜானு இளைஞர்களை மட்டும் கவரும் என்பதே உண்மை.
மொத்தத்தில் ‛ஓகே ஜானு - ஓகே...!