இளம் பெண்ணுக்கும் நடுத்தர வயதை கடந்த ஆணுக்குமான காதலை சொல்லும் படமாக உருவாகி வருகிறது. "உனக்கு 20 எனக்கு 40". அக்ஷய் என்பவரே கதை, வசனம் எழுதி இயக்கி நடிக்கிறார். நாயகியாக ஷாலினி, அம்ருதா என்ற இருவர் நடிக்கிறார்கள். தன் தோழி வீட்டுக்கு அடிக்கடி வரும் ஹீரோயின் தோழியின் தந்தை மீது காதல் கொள்கிறாராம். தோழியின் சகோதரனும் ஹீரோயினை காதலிக்கிறாராம். ஹீரோயின் அப்பாவுக்கு கிடைத்தாரா, மகனுக்கு கிடைத்தாரா என்பதுதான் கதையாம். பெரும்மான்மையான படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாம். "இது நிறைய இடத்தில் நடக்கிற விஷயம்தான். பள்ளிக்கூட மாணவனை ஆசிரியை காதலிக்க வில்லையா? டியூசனுக்கு வரும் மாணவி ஆசிரியரை காதலிக்கவில்லையா, அதைத்தான் படத்தில் சொல்கிறோம். இப்படி முறைகேடான உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகளையும் சொல்கிறோம்" என்கிறார் இயக்குனர் கே.பி.எஸ்.அக்ஷய்.