ஈஸ்கோப் இன்டர்நேஷனல் சார்பில் ஜி.அருண் தயாரிப்பில் உருவாகும் படம் எதிர்மறை. மனோதத்துவம் சார்ந்த மெய் சிலிர்க்கவைக்கும் படம். ஒரு சிபிஐ அதிகாரியின் சொந்த வாழ்க்கையையும் அவர் விசாரிக்கும் தொடர் கொலை வழக்கிற்கும் உள்ள தொடர்பை வைத்து பின்னப்பட்ட கதை. வித்தியாசமான கதைகளம் - திரைக்கதை அமைத்துள்ள இந்தப்படம் பார்ப்பவர்களுக்கு உளவியலுடன் கூடிய மெய்சிலிர்க்கவைக்கும் அனுபவத்தைக் கொடுக்கும்.
இப்படத்தின் கதைகளம் சென்னை. அதனால் சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்திலுமே எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பகுதி பிரத்தியேக பிரம்மான்ட செட்கள் போட்டே எடுக்கப்பட்டுள்ளது சிபிஐ அலுவலக செட் படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்று. கவிப்பேரரசு வைரமுத்துவின் ஐந்து பாடல்கள் படத்திற்கு முத்திரை பதிக்கும்.படத்தின் இசையமைப்பாளர் முருகன் மோகன். இவர் இந்தப்படத்தில் இசைமைப்பாளராக அறிமுகமாகிறார். மும்பையில் ரெகார்டிங் செய்யப்பட்ட இப்படத்தின் பாடல்களை ஹரிஹரன், உதித்நாராயணன், ஸ்ரீனிவாஸ், முருகன் மோகன், சாதனா கனேகர் அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளார்கள்.
புதுமுகங்கள் அஜய்குமார், ராகேஷ்,பானுஸ்ரீ, ஷிரீனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மற்றும் அலெக்ஸ், ஏ.சி.முரளி, ராமநாதன் ஆகியோர் நடித்துள்ளார்கள். எதிர்மறை திரைப்படத்தில் முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து படத்தைத் திரையிடுவதுவரை அனைத்தும் 100 சதவீதம் டிஜிட்டலாக திட்டமிட்டுள்ளனர். எல்லா தரப்பினரையும் கவரும் வித்தியாசமான கதை திரைக்கதை காட்சியமைப்பு கொண்ட இப்படம் தமிழ்பட உலகுக்கு தரமான ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என்று டைரக்டர் ஜி.அருண் தெரிவித்துள்ளார்.
ரெட் ஒன், பேன்டோம் ஆகிய இரு டிஜிட்டல் காமிராக்களை பயன்படுத்தி முழு படத்தையும் எடுத்திருப்பது எதிர்மறையின் ஹைலைட்.