புதுமுக இயக்குனர் அன்பு சரவணன் இயக்கும் படம் சிவப்பு மனிதர்கள். அன்னம் பிலிம் இண்டர்நேஷனல் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் சுரேஷ், சரவணன் தயாரிக்கிறார்கள். ஸ்ரீராம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே 13ம் பக்கம் பார்க்க என்ற படத்தில் நடித்தவர். ஹீரோயினாக மீனாட்சி நடிக்கிறார். சோனா வில்லியாக நடிக்கிறார். இவர்கள் தவிர கஞ்சா கருப்பு, யுவராணி, வேல்முருகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். எம்.தங்க பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் மந்த்ரா இசை அமைக்கிறார்.
"தென் மாவட்டத்து மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொல்கிற படம். அன்பையும் கோபத்தையும் தீவிரமாக வெளிப்படுத்தும் அவர்கள் வாழ்க்கை முறையை ஒரு காதல் கதையின் வழியாக காட்டுகிறோம். சிவகங்கை, மானாமதுரை, பகுதிகளில் இரண்டு கட்டமாக படப்பிடிப்பு நடந்துள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்க இருக்கிறது" என்கிறார் இயக்குனர் அன்பு சரவணன்.