சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கன்னிமாடம் படத்தில் தனது இயல்பான நடிப்பால் அனைவர் கவனத்தையும் ஈர்த்தவர் ஸ்ரீ ராம் கார்த்திக். தற்போது மங்கி டாங்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பெற்றோர்கள் குழந்தைக்காக வாழ்வதை விட குழந்தையோடு அதிகமாக இருப்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக தயாராகிறது.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஆக்ஷன் படமாக யுத்த காண்டம் உருவாகியுள்ளது. இந்த படத்திலும் ஸ்ரீராம் கார்த்திக் நடித்துள்ளார். இதையடுத்து லிவ்விங் டு கெதர் என்ற படத்திலும் நடித்து வருகிறார், இப்படம் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை விளக்கும் படமாக உருவாகிறது. எழுத்தாளர் அஜயன் பாலா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
"கன்னி மாடம் படம் பெற்றுத் தந்த புகழும், பாராட்டும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை எனக்கு பெற்றுத் தருகிறது. நான் நடிக்கும் ஒவ்வொரு படமுமே தனித்தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது. குழந்தைகள் படம், ஒரே ஷாட்டில் உருவாகும் படம். லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை என வெவ்வேறு கதை களங்களை கொண்டதாக இருக்கிறது. கொரோனா காலத்தில் எனது பட வெளியீடுகளும், படப்பிடிப்புகளும் தடைபட்டிருந்தாலும் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் ஸ்ரீராம் கார்த்திக்.




