ஜெ.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனர் ஜெ.எஸ்.கே மற்றும் லியோ விஷன் உரிமையாளர் ராஜ்குமார் இவர்களின் கூட்டு தயாரிப்பான அண்டாவ காணோம்படப்பிடிப்பு துரித வேகத்தில் நடந்து வருகிறது.தேனி அருகே தேனீயை மிஞ்சும் சுறு சுறுப்பில் அண்டாவ காணோம் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த படத்தின் மூலம் ஸ்ரேயா ரெட்டி மீண்டும் நடிக்க வந்துள்ளார். முழுக்க முழுக்க கிராம கதையான உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை, ஸ்ரேயா ரெட்டியை மையப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளதாக புதிமுக டைரக்டரான வடிவேல் தெரிவித்துள்ளார். திருமணமான பெண்ணாக நடிக்கும் ஸ்ரேயா ரெட்டிக்கு இப்படத்தில் திமிரு படத்தைப் போன்ற அதிரடியான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.