Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்டாவ காணோம் இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு

08 செப், 2021 - 15:32 IST
எழுத்தின் அளவு:
Andavakanoam-Directors-next-film-announced

சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரான படம் அண்டாவ காணோம். இதை இயக்கியவர் சி.வேல்மதி என்ற புதுமுக இயக்குனர். இந்த படத்தில் ஸ்ரேயா ரெட்டி ஷோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். தாய்வீட்டு சீதனமாக கொண்டு வந்த அண்டா புகுந்த வீட்டுக்கு வந்த இடத்தில் காணாமல் போக அதை எப்படி ஸ்ரேயா கண்டுபிடிக்கிறார் என்பதை காமெடி கலந்து கிராமிய மணத்தோடு சொன்ன படம்.

ஆனால் தயாரிப்பாளருக்கு இருந்த சில பிரச்சினைகள் காரணமாக பல முறை பட ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. கடைசியாக தயாரிப்பு நிறுவனம் சுயமாக தொடங்கிய ஓடிடி தளத்தில் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டது. என்றாலும் அந்த படம் உரிய முறையில் மக்களை சென்று சேரவில்லை.

இந்த நிலையில் வேல்மதி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த நிறுவனங்கள் இதற்கு முன்பாக அட்டகத்தி, சூதுகவ்வும், இன்று நேற்று நாளை, பீட்சா மிமி வில்லா, காதலும் கடந்து போகும் மற்றும் இறைவி போன்ற படங்களை கூட்டாக தயாரித்துள்ளன.

கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் மற்றும் ஜாங்கோ படங்களின் ஒளிப்பதிவாளரான கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர், நடிகைகள் மற்றும் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்: போதை மாத்திரைக்கு பலிஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்: போதை ... என்னால் முடிந்தவரை மக்களை மகிழ்விப்பேன் : பிறந்தநாள் வாழ்த்துக்கு மம்முட்டி நன்றி என்னால் முடிந்தவரை மக்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

08 செப், 2021 - 19:35 Report Abuse
ilaiyaraja muthu தலைப்பு என்ன குண்டாவ காணோம்....ஆஆஆஆ......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in