சைக்கோ என்பது கொடூரமான நோயல்ல... குணப்படுத்தக் கூடியதுதான் என்ற மருத்துவ உண்மையை அடிப்படையாக கொண்டு தயாராகி வரும் படம் பிரம்ம தேவா. டாக்டர் ராஜசேகருக்கு பிறகு சினிமாவுக்கு வந்திருக்கும் அதிரடி டாக்டர் ராம் தான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தேஜாஸ்ரீயும், முமைத்கானும் நடிக்கிறார்கள். இவர்கள் 2 பேருமே போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்களாம். டாக்டர் ராம் ஆக்ஷன் காட்சிகளில் பின்னியெடுத்திருக்கிறாராம். படத்தின் ஹைலைட்டாக சென்னையில் உள்ள 10 மாடி கட்டிடத்தில் இருந்து டூப் போடாமல் ராம் குதித்த காட்சியையும், பிரமாண்ட கார் சேஸிங் காட்சியையும் சொல்லலாம் என்கிறார் புதுமுக இயக்குனர் தர்மலிங்கம்.
படத்தின் நாயகன் டாக்டர் ராம் திருச்சியை சேர்ந்தவர். காது மூக்கு தொண்டை டாக்டர். கட்டுவீரியன் படத்தில் அறிமுகமான இவர் துணிச்சலான கேரக்டரை தில்லாக ஏற்று நடித்திருக்கிறார். பெண்டகன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். டாக்டர் ராம், தேஜாஸ்ரீ, முமைத்கான் தவிர, இப்படத்தில் லிவிங்ஸ்டன், சஞ்சய், விஜய் பாபு, மகாநதி சங்கர், முத்துக்காளை, தியாகு, பல்லவி, ஆர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள்.