கோயம்புத்தூர் ஆர்.விஸ்வநாதன் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் படம் நாடோடி வம்சம். இந்த படத்தில் நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை அர்ச்சனா நடித்திருக்கிறார். டைரக்டர் பழ.ராஜ்கண்ணன் இயக்கும் இப்படத்தில் வரும் இரண்டு தாதாக்களாக கன்னட நடிகர் தேவராஜ் மற்றும் காதல் தண்டபாணி நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர கஞ்சா கருப்பு, சிங்கமுத்து, கிரேன் மனோகர், நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஆர்.விஸ்வநாதன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.நாடோடி வம்சம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்து, மற்ற வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.