காமெடி கதையில் நடிக்கும் அனுஷ்கா | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு | கடுவாவுக்கு யு/ஏ சான்றிதழ் ; சிக்கலின்றி வெளியாகிறது | மாமன்னன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு | அடேங்கப்பா... 800 தியேட்டர்களில் வெளியாகும் 'தி லெஜண்ட்' | மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ் | உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு | டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? |
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பிரபல சீரியல் ஒன்றை மூன்று மாதங்கள் நிறுத்தி வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஞ்சித், ப்ரியா ராமன், ஸ்ரீ நிதி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் 'செந்தூரப்பூவே' தொடர் விஜய் டிவியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பபாங்கான கதைக்களம் கொண்ட இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் பாய்ண்ட்ஸ்களை அள்ளும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சரியான டைம் ஸ்லாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சில தொடர்களின் நேரங்களும் மாற்றப்படவுள்ளது.
அந்த வகையில் 1 மணி நேர ஷோவிற்காக இரண்டு சீரியல்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். இதற்கிடையில் செந்தூரப்பூவே தொடரை 3 மாதங்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்க தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பிக்பாஸ் நிகழ்ச்சிகாகவா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதேபோல் விஜய் டிவின் மற்றொரு முக்கிய தொடரான தேன்மொழி பி.ஏ தொடரும் முடிவை நோக்கி நகர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.