அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கண்ணான கண்ணே தொடர் டிஆர்பியில் உச்சம் தொட்டு ஹிட் சீரியல்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது. இந்த சீரியலின் கதாநாயகியாக மீரா கதாபாத்திரத்தில் நடித்துவரும் நிமேஷிகா ராதாகிருஷ்ணனும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமாகி வருகிறார்.
கோவையில் பேஷன் டெக்னாலஜி படித்து வந்த நிமேஷிகா, லோக்கல் சேனலில் தொகுப்பாளினியாக பயணத்தை ஆரம்பித்தார். ஆனால், சின்னத்திரையில் இவரது ஆரம்பகால கட்டம் அவ்வளவு பாஸிட்டிவாக இல்லை. நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகள் தேடி அலைந்து வந்த போது, விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடிக்க முதல் முறையாக வாய்ப்பு கிடைத்தது. அதில் நீலாம்பரி என்ற நெகடிவ் ரோலில் சூப்பராக நடித்திருப்பார். அதே போல் மலையாளத்திலும் அனுராகம் என்ற சீரியலிலும் கமிட்டாகி நடித்து வந்தார். ஆனால், இந்த இரண்டு சீரியல்களுமே கொரோனா காலக்கட்டத்தில் கைவிடப்பட்டது.
இருந்தாலும் மனதை தளரவிடாமல் தொடர்ந்து முயற்சித்த போது தான் சன் டிவியின் கண்ணான கண்ணே வாய்ப்பு கிடைத்தது. தற்போது மீராவாக ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் நிமேஷிகா போட்டோஷூட்களில் தனக்கான ஆடைகளை அவரே டிசைன் செய்து அசத்தி வருகிறார். நிமேஷிகா நடிப்பை தேர்ந்தெடுத்தது அவரது பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால், நடிப்பு, பேஷன் டிசைன் என இரண்டிலுமே நிமேஷிகா சாதித்து வருகிறார்.