டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' |
பிரபல சீரியல் நடிகை சமீரா கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து சக நடிகர்களும் தொலைக்காட்சி பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு சீரியல் நடிகையான சமீரா, விஜய் டிவியின் பகல் நிலவு சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். சமீரா அந்த சீரியலில் அவருடன் இணைந்து நடித்த சையத் அன்வரை காதலித்து மணந்து கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் சமீரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார். இதனை தொடர்ந்து மெட்டர்னிட்டி போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி சமீராவுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நற்செய்தியை இருவரும் இணைந்து தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து இந்த தம்பதிகளுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.