சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அமேசான் ப்ரைம் நிறுவனம் வழங்கிய லொள்ளு காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். மறைந்த நடிகர் விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை சிரிக்கமால் இருக்கும் போட்டியாளர்களே வெற்றியாளர்கள், மேலும் பரிசுத்தொகை 25 லட்சம். அந்த நிகழ்ச்சியில் புகழ் மற்றும் அபிஷேக் கடைசி வரை சிரிக்காமல் இருந்து வெற்றி பெற்றார். இதனையடுத்து 6 மணி நேரத்தில் 25 லட்சம் சம்பாதித்த புகழ் என செய்திகள் வைரலாகின. தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ள புகழ், 'வெற்றி பெற்ற பரிசுத்தொகை இரண்டாக பிரிக்கப்பட்டது. 12.5 லட்சத்தில் டிடிஸ், வரி போக 7 லட்சம் தான் கைக்கு கிடைத்தது. ஆனால் 25 லட்சம் வாங்கிவிட்டேன் என செய்திகள் பரவின' என அவர் கூறினார்.