பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் | காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? |
டிக்டாக் பிரபலமான தர்ஷா குப்தா தனக்கு கிடைத்த வாய்ப்பை சின்னத்திரையில் சரியாக பயன்படுத்தி கொண்டார். விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரது ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் உயர காரணமாக இருந்தது.
இதனையடுத்து திரைப்பட வாய்ப்புகள் கதவை தட்டவே, வெள்ளித்திரையில் பிஸியாகி விட்டார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களால் ரசிகர்களை கட்டிப்போடும் தர்ஷா, ஓணம் ஸ்பெஷலாக சில புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவரின் அந்த அழகிய புகைப்படங்களை பார்க்கும் நெட்டீசன்கள் வாய் பேச முடியாமல் மெய் மறந்து ரசித்து வருகின்றனர்.