புஷ்பா 2வில் விஜய்சேதுபதி இல்லை | ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' |
பூவே உனக்காக சீரியல் டி ஆர் பியில் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு பக்க பலமாக சினிமா நடிகை ஒருவரை சீரியலுக்குள் நுழைத்துள்ளனர்.
வே உனக்காக தொடரில் சமீபத்தில் நாயகன் கதாபாத்திரத்தில் அசீம் இணைந்தார். அதன்பிறகு இந்த தொடர் டி ஆர் பி பட்டியலில் முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் புதிதாக சினிமா நடிகை ஒருவர் இணையப் போவதாக டிவி நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த நடிகை யார் என்ற ரகசியம் உடைந்துள்ளது.
தனுஷூடன் திருடா திருடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாயா சிங் மீண்டும் சின்னத்திரையில் பூவே உனக்காக சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து ரீ என்ட்ரி கொடுக்கிறார். முன்னதாக அவர் நாகம்மா, ரன் ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அந்த தொடர்கள் போதிய வரவேற்பில்லாமல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சாயா சிங்கின் இந்த ரீ என்ட்ரி அவரது கேரியருக்கும், தொடருக்கும் பக்க பலமாக இருந்து கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.