மீண்டும் தமிழுக்கு வருகிறார் பாவனா | பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் | இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி - தனுஷ் |
குளிர் 100 படத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவிற்கு நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் டிவி வாய்ப்பளித்தது. சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்து பிரபலமானார். தொடர்ந்து விஜய் டிவியின் மற்றொரு சீரியலான காற்றின் மொழி தொடரிலும் நாயகனாக நடித்தார். அந்த தொடருக்கு சரிவர வரவேற்பு கிடைக்காததால் 331 வது எபிசோடிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது அந்த டிவியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் மற்றுமொரு முன்னணி டிவி சேனலில் ஒளிபரப்பாகவுள்ள கயல் என்கிற புதிய தொடரில் சஞ்சீவ் கமிட்டாகியுள்ளார். இந்த தொடரில் சஞ்சீவிற்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடிக்கவுள்ளார். சைத்ரா தற்போது ஜி தமிழ், யாரடி நீ மோகினி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.