2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அன்புடன் குஷி. இதில் பிரஜின் ஹீரோவாக நடிக்கிறார். அவரது ஜோடியாக முதலில் மானசி ஜோஷி நடித்து வந்தார். பின்னர் அவர் திடீரென விலகிக் கொண்டார். அதற்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
அவருக்கு பதிலாக ரேஷ்மா வெங்கடேஷ் நடித்து ந்தார். 250 எபிசோட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி உள்ள நிலையில் ரேஷ்மாவும் சீரியலில் இருந்து வெளியேறி விட்டார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்ரில் தெரிவித்திருப்பதாவது: நான் அன்புடன் குஷி தொடரில் இருந்து விலகுகிறேன். இனி அந்த தொடரில் என்னை நீங்கள் பார்க்க முடியாது. அந்த கதாபாத்திரத்தை நான் தவற விடுகிறேன். அன்புடன் குஷி குழுவினருக்கும், விஜய் டிவிக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. விரைவி நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன். என்று கூறியுள்ளார்.
இனி குஷி கேரக்டரில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஹீரோயினாக நடித்த ஸ்ரேயா அஞ்சன் நடிக்கிறார்.