'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
எல்லா சேனல்களுமே வெவ்வேறு பெயர்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்துகிறது. எவ்வளவு பிரமாண்டமாக நடத்துகிறார்கள் என்பதுதான் வித்தியாசம். இப்போது சமீபத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் சேனலும் நடன நிகழ்ச்சியை நடத்துகிறது.
டான்ஸ் வெசஸ் டான்ஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடன இயக்குனர் பிருந்தா, நடிகர் நகுல் ஆகியோர் நடுவர்களாக இருந்த நிலையில் மூன்றாவது நபர் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருந்தார். தற்போது அந்த சஸ்பென்ஸூம் உடைந்துவிட்டது. அவர் வேறு யாருமல்ல நடிகை ஓவியா தான்.
பிருந்தா, நகுல், ஓவியா ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த நிகழ்ச்சியை வழிநடத்துகிறார்கள். சினிமா பாடல்களுக்கு அரங்கம் அமைப்பது போன்ற ஒவ்வொரு எபிசோடுக்கும் தனி தனி கான்செப்ட்டில் அரங்கம் அமைத்து அதற்கு ஏற்ற நடனப் போட்டியை நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சி வருகிற 24ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.