டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

இப்போது சினிமாவில் நிறைய நந்திதாக்கள் இருக்கிறார்கள். முதல் நந்திதா ஈரநிலம் படத்தில் நடித்தவர். பாரதிராஜா இயக்கிய இந்தப் படத்தின் மூலம்தான் நந்திதா புகழ்பெற்றார். ஆனால் அதற்கு முன்பே காதல்ஜாதி என்ற படத்தில் அறிமுகமாகியிருந்தார். அப்பா நடன இயக்குனர் என்பதால் உதவி நடன இயக்குனராக இருந்து நடிகை ஆனவர்.
வசந்தம் வந்தாச்சு, காசு இருக்கணும், அழகிய அசுரா, மனசே மவுனமா, திரு.ரங்கா, ராவண தேசம் உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நந்திதா கேமரமேன் காசி விசுவநாதன் என்பதை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் நாகவல்லி, புவனேஸ்வரி தொடர்களில் நடித்தார். பின்பு நடிப்புக்கு பிரேக் எடுத்துக் கொண்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிசஸ் நிகழ்ச்சியில் தன் கணவருடன் இணைந்து பங்கேற்று வருகிறார். தனது பெயரையும் நந்திதா என்பதை மாற்றி இயற்பெயரான ஜெனிபர் என்பதையே மீண்டும் வைத்துக் கொண்டார். நல்ல கேரக்டர்கள் அமைந்தால் சினிமாவிலும் நடிக்க தயாராக வந்திருக்கிறார் ஜெனிபர்.