வெப் தொடர் இயக்க தயங்கிய ரேவதி | சிரஞ்சீவியுடன் கவர்ச்சி ஆட்டம் போடும் மவுனி ராய் | பிளாஷ்பேக்: ஜெய்சங்கர் வீட்டில் வேலை பார்த்த நடிகர் | பிளாஷ்பேக்: சினிமாவான துப்பறியும் நாவல் | பிரியதர்ஷன், அக்ஷய் குமார் படத்தில் விலகிய நடிகர் மீண்டும் இணைந்தார் | மம்முட்டியை விட கிரேஸ் ஆண்டனிக்கு கதை சொல்ல தான் அதிக நேரம் பிடித்தது : இயக்குனர் ராம் | இயக்குனர் ரஞ்சித் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை தள்ளுபடி செய்த கர்நாடக நீதிமன்றம் | பிரேமலு இயக்குனரின் படத்தில் இணைந்த நிவின்பாலி, மமிதா பைஜூ : பஹத் பாசில் தயாரிக்கிறார் | என் படத்திற்கு ‛ஜானகி' டைட்டிலை அனுமதித்த சென்சார், சுரேஷ்கோபி படத்தை எதிர்ப்பது ஏன்? இயக்குனர் ஆதங்கம் | சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி |
விஜய் தொலைக்காட்சி புராணத் தொடர்களுக்கு முக்கியத்தும் தரும் அதே நேரத்தில் குடும்பத் தொடர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வந்திருக்கிறது கல்யாணமாம் கல்யாணம். நேற்று முதல் இந்த புதிய தொடர் ஒளிபரப்பை தொடங்கி உள்ளது. இதில் 7சி தொடரில் நடித்த ஸ்ரீத்து ஹீரோயின் கமலியாக நடிக்கிறார், அவருக்கு ஜோடி சூர்யாவாக தேஜா நடிக்கிறார். பிரபல இயக்குனர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜ், மவுலி ஆகியோரும் நடிக்கிறார்கள். பிரம்மா இயக்குகிறார். தொடரின் கதை இதுதான்.
கமலி, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண். உறவுகள் நிறைந்த குடும்ப வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். திருமணம் மற்றும் சடங்குகள் மீது அதீத நம்பிக்கையுடன் இருப்பவர். ஆனால், நாயகன் சூர்யாவோ பணக்கார வீட்டு குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்யாண வாழ்க்கையில் துளி கூட நம்பிக்கை இல்லாதவர். எப்போதும் பேஸ்புக் டுவிட்டர், பிசினஸ் என வாழ்கிறவர். பெண் பார்க்கும் படலத்திலேயே டைவர்சுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறவர்.
கமலியின் எளிமைக் குணத்தைக் கண்டு வியக்கும் சூர்யாவின் தாத்தா, அவனுக்கு கமலியைத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். திருமணத்தில் விருப்பமே இல்லாமல் இருக்கும் சூர்யா இதற்கு சம்மதிப்பாரா? சூர்யா, கமலி இடையே திருமணம் நடக்குமா? திருமணத்திற்கு பிறகு என்னென்ன நடக்கும் என்பது தான் தொடரின் கதை.