ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர். கே.பாலச்சந்தர் இயக்கிய தில்லுமுல்லு' படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அவர் பின்னர் சின்னத்திரைக்கு வந்தார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான முப்பது கோடி முகங்கள் தொடர் மூலம் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பந்தம், வாழப்பிறந்தவர்கள், ஜாதி மல்லி, அலைகள், பெண், அழகி உள்பட 20க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்தார். ஆரோகணம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது தொகுப்பாளினி என்ற புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் உறவைத் தேடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு நேர் எதிர்மாறான நிகழ்ச்சி. ஆண்டுக்கணக்கில் பிரிந்திருக்கும் சொந்தங்களை ஒரே இடத்தில் உட்கார வைத்து பேசி அவர்களுக்குள் இருக்கும் மனவருத்தங்களை போக்கி ஒற்றுமையாக்கி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி.
வருகிற 8ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சி வெற்றி பெற்றால் வார நாட்கள் முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது.