நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் திரைப்படமாகி இருக்கிறது. முதன் முறையாக ஒரு நாவல், சின்னத்திரை சீரியலாகிறது. பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய தலையணை பூக்கள் நாவல் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடராக எடுக்கப்படுகிறது.
பாலகுமாரன் தமிழ் இலக்கிய உலகின் பிரபலமான எழுத்தாளர். 150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய 14 நாவல்கள் திரைப்படமாகி உள்ளது. பல படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய குடும்ப நாவல்தான் தலையணை பூக்கள். கிராமத்தில் விசாயம் பொய்த்து விட்டதால் அங்கிருந்து நகரத்து தனது நான்கு மகன்களுடன் பிழைப்பு தேடி சென்னை வரும் விவசாயி இங்கு தன் மனைவி பெயரில் லட்சுமி அண்ட் கோ என்ற பாத்திர கடை தொடங்குகிறார். மகன்களின் உழைப்பால் அது பெரிய நிறுவனமாக வளர்கிறது. அந்த வீட்டுக்கு மருமகள்கள் வரும்போது என்ன மாற்றங்கள் நடக்கிறது. என்பதுதான் கதை. தனித்தனியாக பிரியும் சகோதரர்கள், போட்டி நிறுவனங்கள் தொடங்குவது. ஒருரை வீழ்த்து ஒருவர் நினைப்பது என பணம் வந்த பிறகு பாசம் பறந்து போன கதையாக விரியும்.
இதில் குடும்ப தலைவராக டெல்லி குமார் நடிக்கிறர். மகன்களாக ஸ்ரீ, ஸ்ரீகர் நடிக்கிறார்கள். முதல் மருமகளாக நிஷா நடிக்கிறார். வருகிற 23ந் தேதி முதல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.