Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மைனா கேரக்டரில் என் அம்மாவைதான் பிரதிபலிக்கிறேன்! -சரவணன் மீனாட்சி நந்தினி பேட்டி

10 ஜன, 2016 - 10:25 IST
எழுத்தின் அளவு:
Tv-serial-actress-Nandhini-exclusive-interview

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நந்தினி. ஒரே தொடரில் ஓஹோவென்று புகழின் உச்சிக்கு சென்றுள்ள அவர், தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு பெற்றோரும் என்னை அவர்களின் சொந்த மகள் போன்று நினைக்கிறார்கள். அப்படியொரு பெருமையை சரவணன் மீனாட்சி தொடர் எனக்கு வாங்கித்தந்திருக்கிறது என்கிறார்.

தினமலர் இணையதளத்திற்காக மைனா நந்தினியிடம் ஒரு கலகல பேட்டி...


* சினிமாவில் என்ட்ரியான நீங்கள், சின்னத்திரைக்கு வந்தது ஏன்?


வம்சம் படத்தில் சூரியின் ஜோடியாகவும், கேடி பில்லா கில்லாடி ரங்காவில் கஞ்சா கருப்பு ஜோடியாகவும் நடித்தேன். அந்த படங்களில் ஒரு கேரக்டராக வந்து போனேன். தியேட்டரில் ரசிகர்கள் சிரித்தார்கள். ஆனால் எனக்கு பெயர் கிடைக்கவில்லை. அப்போது, என்னை தொடர்புகொண்ட, சின்னத்திரையை சேர்ந்த ரமணன் என்ற டைரக்டர், நீங்கதானே வம்சம் படத்தில் மலர் மலர் -என்று சத்தமாக குரல் கொடுத்தீர்கள் என்று கேட்டவர், சீரியலில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக அழைத்தார்.


ஆனால் நான் நேரில் சென்றபோது என்னை அந்த படத்தில் கிராமத்து சாயலில் பார்த்த அவருக்கு அடையாளமே தெரியவில்லை. அந்த படத்துல கருப்பா வேற மாதிரி இருந்தீங்க. இப்ப கலரா இருக்கீங்களே என்றார். ஏற்கனவே நான் கொஞ்சம் கறுப்புதான். ஆனால் அந்த படத்துக்காக ரொம்ப கருப்பா மாத்திட்டாங்க என்று சொன்னேன். அப்பதான் சரவணன் மீனாட்சியில் ரேவதின்னு ஒரு கேரக்டர் வருது என்று சொன்னார். அதையடுத்து ஆடிசன் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். அந்த ரேவதி கேரக்டர்தான் பின்னர் மைனாவாக மாறியது. அப்போது அது அமைதியான கேரக்டர் இல்லை. பயங்கர காமெடியான கேரக்டர் என்று மைனா ரோல் பற்றி சொன்னார். கிட்டத்தட்ட வம்சம் கேரக்டர் போலவே கிராமத்து சாயலில் இருந்ததால் அந்த படத்தில் நடித்ததுபோலவே, ஏய் மீனாட்சி -என்று குரல் கொடுத்தபடி நடிக்கத் தொடங்கினேன். முதல் நாள் எனது நடிப்பைப்பார்த்து அனைவரும் பாராட்டினார்கள். சூப்பரா பண்றீங்க. செமயா இருக்கு என்று சொன்னார்கள். அது எனக்கு உற்சாகத்தைக்கொடுத்தது.


அப்படி சரவணன் மீனாட்சியில் மைனா கேரக்டரை தொடர்ந்தபோது, யு-டியூப்பில் யாராவது எனது கேரக்டரைப்பற்றி கமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறர்களா? என்று ஒருநாள் எதேச்சையாக பார்த்தேன். ஹீரோவுக்குமில்லை, ஹீரோயினுக்குமில்லை. ஐ லவ் மைனா, வாவ் மைனா, செம கேரக்டர், உங்களுக்கு பெரிய பியூச்சர் இருக்கு என்று நிறைய கமெண்ட் கொடுத்திருந்தார்கள். அதைப் பார்த்து அழுது விட்டேன். அன்றிலிருந்து ரசிகர்களை எப்போதுமே சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மைனா கேரக்டரில் நடித்து வருகிறேன்.


அதன்பிறகு விஜய் டிவியில் ஜோடி நம்பர்-ஒன்னில் பங்கேற்றேன், கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் வின் பண்ணினேன். மதுரை பொண்ணு நான். ஆனால் வெஸ்டர்ன் சமையல் செய்து காட்டினேன். மதுரை பெண் என்றதும், புளி குழம்பு, கறி குழம்பு என்று ஏதாவது செய்வார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் நான், கேக், பாஸ்ட்டா என வெரைட்டியாக செய்து அசத்தினேன். அதில் வின் பண்ணினது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. இப்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் வருகிறேன். இது நான் எதிர்பார்க்காத பிளாட்பார்ம். அந்த இடத்துல நாம உட்கார்ந்திருக்க நாம் தகுதியான ஆளா என்ற கேள்வி எனக்குள் இருக்கும். அந்த ஷோவுல நான் சிரிக்கிறது மட்டும்தான் பண்ணுவேன். அதைப்பார்த்து நிறைய பேர் நீங்க சிரிக்கிற பார்க்கிறதுக்குத்தான் நான் உட்கார்ந்திருக்கோம் என்று சொன்னார்கள். யாருன்னே தெரியாதவங்க சொல்றாங்க. அப்படின்னா நாம தகுதியான இடத்துலதான் உட்கார்ந்திருக்கோம் என்பது எனக்கு புரிந்தது. முக்கியமாக, சரவணன் மீனாட்சியில் நான் காமெடியாக பண்ணுவதினால்தான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கேப்டனாக இருக்க தகுதியானவள் என்று என்னை உட்கார வைத்திருக்கிறார்கள்.


மேலும், முன்பெல்லாம் ராஜா-ராணியோட மகள் போகிறாள் என்று என்னைப்பார்த்து சொன்னவர்களே இப்போது, என் பெற்றோரைப்பார்த்தால், மைனாவோட அப்பா அம்மாதானே நீங்கள் என்று கேட்கிறார்கள். அதைக்கேட்டு என் அப்பா அம்மா ரொம்ப சந்தோசமடைகிறார்கள். அது எனக்கும் சந்தோசமாக உள்ளது.


சினிமாவில் பெரிதாக ஸ்கோர் பண்ண வேண்டும் என்பதுதான் உங்களது முதல் நோக்கமாக இருந்திருக்கிறது. இப்போது அதற்கான முயற்சி எடுக்கிறீர்களா? என்று அவரைக்கேட்டால்,


டிவிக்கு வந்த பிறகு நான் எந்த சினிமா வாய்ப்புகளுக்காகவும் முயற்சி எடுக்கவில்லை. ஆனால் நூறு டைரக்டர்களில் ஒரு பத்து பேராவது சரவணன் மீனாட்சியில் எனது பர்பாமென்ஸைப் பார்த்திருப்பார்கள். அதேபோல் என்னை பார்ப்ப வர்களும் நீங்கள் ஏன் சினிமாவுக்கு வரக்கூடாது என்றும் கேட்கிறார்கள். ஆனால் எனக்கு இனிமேல் சினிமாவுக்கு வந்தால் இந்த மைனா கேரக்டரை மிஞ்சும் வகையிலான ஒரு கேரக்டர் வேண்டும். இந்த மைனா கேரக்டரை மறந்து அப்போது நான் நடிக்கும் கேரக்டரைப்பற்றி ரசிகர்கள் பேச வேண்டும். அந்த மாதிரியான ஒரு வேடம் சினிமாவில் கிடைக்கும்போது நடிப்பேன். சின்ன வேடத்தில் நான் நடித்தால் எனக்கு இருக்கிற பெயர் போய் விடும். அதனால் அந்த வேல்யூ போய்விடாத வகையில் வெயிட்டான வேடம் கிடைத்தால் மட்டுமே சினிமாவில் நடிப்பேன்.


ரோமியோ ஜூலியட்டில் ஒரு சீனில் வந்தேன். எல்லோரும் என்சாய் பண்ணினார்கள். ஆனால் இன்னும் கொஞ்சம் வந்திருக்கலாமே. படம் முழுக்க வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்கள். ஆக, ரசிகர்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிகிறது. மேலும், இப்ப நான் என்னோட ஒர்க்கிற்கு சின்சியராக இருக்கேன். என்னோட சேனலுக்கும் உண்மையாக இருக்கிறேன். எப்போதுமே உண்மையாக இருப்பேன்.


என்னோட சரவணன் மீனாட்சி டீமில் இருக்கிற டைரக்டர், ரைட்டர் எல்லோருமே நல்ல கேரக்டராக இருந்தால் மட்டுமே நடி என்பார்கள். நீ பெருசா நடிச்சா நாங்கதான் சந்தோசப்படுவோம் என்கிறார்கள். என் அம்மா அப்பா என்னை நந்தினியா வளர்த்து விட்டாங்க. என்னை மைனாவா வளர்த்து விட்டது விஜய் டிவி. அதனால் நான் இன்னும் பெருசா வரும்போது அவங்க ஹேப்பியா பீல் பண்ணுவாங்க. அதனால்தான் நான் பெரிய விசயத்தை எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்.


* மைனா கேரக்டருக்காக ஏதாவது ஹோம் ஒர்க் செய்கிறீர்களா?


நான் நடிக்கும் மைனா கேரக்டர் என் அம்மா. அவர்கள் பேசுவது. பக்கத்து வீட்டுக்காரங்களிடம் சண்டை போடுவது. அவங்களோட ரியாக்சன். எங்க அம்மா யாராவது கதை சொன்னா, அப்படியா ஆத்தாடி, அப்படியா சங்கதி என்று இழுத்து பேசுவார்கள். அதைத்தான் நான் மைனா கேரக்டரில் செய்கிறேன். எங்க அம்மாவோட பாடி லாங்குவேஜ், ஸ்பீச் எல்லாமே வேற மாதிரியிருக்கும். சின்ன வயதில் இருந்தே நான் என் அப்பா அம்மாவை கேலி பண்ணுவேன். அதோடு, நான் மைனா கேரக்டரில் நடித்தபோது எல்லோருமே சிரித்தார்கள். அப்படின்னா எங்க அம்மாவோட கேரக்டர் சிரிக்கிற மாதிரிதான் இருக்கு என்பதை புரிந்து கொண்டேன். ஆக, இந்த மைனா கேரக்டர் மூலம் எனக்கு கிடைக்கும் பெயர் புகழ் எல்லாமே என் அம்மாவைதான் சேரும்.


ஆனால் இப்போது என் அம்மா வெளியில் செல்லும்போது பேசுவதைப்பார்த்து, நீங்க ஏன் மைனா மாதிரியே பேசுறீங்க என்று கேட்கிறார்கள். அதைக்கேட்டு என் பொண்ணுதான் என்னை மாதிரி பேசுது. அவதான் என்னைய காப்பி அடிக்கிறா என்பார்கள். ஆக, என் அம்மாவைதான் நான் பிரதிபலிக்கிறேன்.யாராவது பேசுவதை, ரியாக்ட் பண்ணுவதைப்பார்த்தால் அப்படியே அதை பிரதிபலிக்கிற திறமை என்னிடம் இருக்கிறது.


சில நேரங்களில் கண்ணாடி முன்நின்று அழுது பார்ப்பேன். முக்கியமாக அழகா அழுறது எப்படி என்று அழுவேன். அப்போது மைண்டு வாய்சில் உன் மூஞ்சியப்பார்த்து உனக்கே அழுகை வருதே மற்றவங்களுக்கு எப்படியிருக்கும் என்று நினைக்கும்போது சிரித்து விடுவேன்.


என்னதான் டிவியில் பிரபலமாக இருந்தாலும் சினிமாவில் நடிப்பதைத்தானே டிவியில் உள்ளவர்கள் பெரிதாக நினைக்கிறார்கள் ?


தினமும் ஒரு சீரியலில் வரும் நடிகர் நடிகைகளை பார்த்து விட்டு மறந்து விடுவார்கள். ஆனால் ஏதோ ஒரு படத்தில் ஒரு சீனில் நடித்திருந்தாலும் அதை ஞாபகம் வைத்திருப்பார்கள். பத்து வருசத்துக்கு முன்பு விஜய் ஒரு படத்தில் நடித்திருந்தார் என்றால் அதைப்பற்றி இப்போதும் பேசிக்கொள்வார்கள். ஆனால் சீரியலை அப்போதே மறந்து விடுவார்கள். அதனால்தான் என்றும் மனதில் நிற்கக்கூடிய சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சின்னத்திரை கலைஞர்களுக்கு இருக்கிறது.


சைக்கிளில் போறவங்களுக்கு பைக்கில் போக ஆசை வரும். பைக்கில் போறவங்களுக்கு காரில் போக ஆசை வரும். அதேமாதிரி எனக்கு விஜய்கூடவோ, தனுஷ்கூடவோ ஒரு தங்கை வேடத்திலோ, காமெடி வேடத்திலோ நடிக்கனுங்கிற ஆசை இருக்கு.




* ஏன் ஹீரோயினா நடிக்கிற ஆசை வரவில்லை?


எனக்கு என்னோட தகுதி தெரியும். என்னோட நோக்கம் என்னன்னா ரசிகர்களை சிரிக்க வைக்கனும். கோவை சரளா மேடம் மாதிரி காமெடி செய்து கிட்டே இருக்கனும். இப்பவும் காமெடியில ஹீரோயினின்னா அவங்கதான். எனக்கு அந்த மாதிரிதான் வேணும். கேரக்டர் ஆர்ட்டிஸ்டா நடிச்சா கடைசி வரைக்கும் அப்படியே இருக்கலாம். இன்னைக்கு ஹீரோயினா நடிச்சிட்டு கொஞ்சம் வருசத்துக்கு பிறகு அக்கா, அம்மா வேடம்னு நடிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை.


இன்னைக்கு நான் வெளியில் போறேன்னா மைனா கேரக்டரை வச்சு எனக்கு மரியாதை இருக்கு. அந்த மாதிரி நான் நடிக்கிற கேரக்டர்கள் எனக்கு மரியாதையை தேடித்தரனும். ஒவ்வொருத்தரும் என்னை அவங்க வீட்டு பொண்ணா நெனைக்கிறாங்க. இந்த மாதிரி நான் நடிக்கிற வேடங்களைப்பார்த்துட்டு என்னை அவங்கள்ல ஒருத்தரா நினைக்கனும். இதுதான் என்னோட ஆசை என்கிறார் சரவணன் மீனாட்சி தொடரின் மைனாவான நந்தினி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in