சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தவர் சந்திரா லட்சுமண். அதன்பிறகு காதலிக்க நேரமில்லை, வசந்தம், மகள் போன்ற தொடர்களில் நடித்த அவர், தற்போது பாசமலர் தொடரில் நடித்து வருகிறார்.
இதுபற்றி சந்திரா லட்சுமண் கூறுகையில், தமிழ் சீரியல்களில் நடிப்பதற்கு முன்பே நான் பல மலையாள சீரியல்களில் நடித்திருக்கிறேன். அதோடு, பெரும்பாலும் செண்டிமென்டான வேடங்களாகவே நடித்தேன். அதனால் கேரளா பெண்கள் மத்தியில் எனக்கு ரொம்ப நல்ல பெயர் இருந்து வருகிறது. ஆனால் தமிழில் அறிமுகமான முதல் சீரியலிலேயே வில்லி போன்ற ஒரு வேடத்தில்தான நடித்தேன். அந்த வேடத்தில் என்னை ஓப்பன் செய்தபோது பெரிய பில்டப் கொடுத்து படமாக்கினார் இயக்குனர் திருச்செல்வம்.
ஆனபோதும், அந்த சமயத்தில் மலையாள சீரியல்களிலும் நான் பிசியாக நடித்துக்கொண்டிருந்ததால், தமிழில் அடுத்தடுத்து வந்த டைட்டில் வேடங்களில் உடனடியாக என்னால் கமிட்டாக முடியாதநிலை இருந்தது. ஆனால் அதன்பிறகு தமிழுக்கு வந்து விட்டேன். அதோடு, ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி உள்பட சில படங்களிலும் நடித்திருக்கிறேன்.
மேலும், தற்போது நான் நடித்து வரும் பாசமலர் தொடரில் அண்ணன் - தங்கையை மையப்படுத்திய கதையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த தொடரில் தங்கை வேடத்தில் நடிக்கும் நான் எனது செண்டிமென்டான நடிப்பினால் ஏராளமான குடும்பப் பெண்களை கவர்ந்துவருகிறேன். அதனால் சில சீரியல்களில் நெகடீவாக நடித்தபோது என்னை திட்டியவர்களே இப்போது பாராட்டுகிறார்கள். இதையடுத்து இனிமேல் தொடர்ந்து செண்டிமென்ட்டான வேடங்களுக்கு முதலிடம் கொடுக்க முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறும் சந்திரா லட்சுமண், நான் நிஜத்திலும ரொம்ப பாசக்கார பெண். அனைவரிடமும் பாசமாக பழகுவேன். அதைத்தான் இந்த சீரியலில் பிரதிபலித்திருக்கிறேன் என்கிறார்.