படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர் சந்தியா ராகம். இதில் சந்தியா ஜகர்லாமுடி, அண்டாரா சவர்னாகர், பாவனா லாஸ்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மாயா கதாபாத்திரத்தில் நடித்து வரும் அண்டாராவுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களின் கனவு கன்னி பட்டியலில் அண்டாரா முன்னேறி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நான் ஒருவரை காதலித்தேன். அவர் எனது பிறந்தநாளன்று அழகாக வாழ்த்துகள் சொல்லி புரொபோஸ் செய்தார். ஆனால், அந்த காதல் ப்ரேக்கப் ஆகிவிட்டது. எனவே, இனி காதல் திருமணம் பற்றி யோசிக்கும் எண்ணமே இல்லை. வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வைத்தால் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கூறியுள்ளார்.