புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? |
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கம்பேக் கொடுத்தார் நடிகை ஸ்ருத்திகா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரும் புகழ் பெற்ற ஸ்ருத்திகா சொந்தமாக யூ-டியூப் சேனல் தொடங்கி கலக்கி வருகிறார். இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிந்தி பிக்பாஸில் நுழைந்து விளையாடி வருகிறார். வெகுளித்தனமான பேச்சுக்கு பெயர்போன ஸ்ருத்திகா அவ்வப்போது ஹிந்தி பிக்பாஸ் வீட்டில் தெரியாமல் தமிழில் பேசி விடுகிறார். இதை சக போட்டியாளர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் டாஸ்க் ஒன்றில் விளையாடிய ஸ்ருத்திகா, 'நான் பேசுவதையும், என் மொழியையும் நீங்கள் கிண்டல் செய்வது எனக்கு நன்றாகவே தெரிகிறது. கிண்டலுக்கும் காமெடிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், எல்லாம் பேசிவிட்டு எனக்கு தமிழகம் ரொம்ப பிடிக்கும், தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும் என்று சொல்வது தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என்று நெத்தியடியாக பதிலடி கொடுத்துள்ளார்.