சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை |
பல சுவாரசியமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி, சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் இணையருடன் பங்கேற்கும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை என்கிற நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதற்கு முன்னதாக 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் சீசன் 5க்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த், அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்க நடிகை ராதா மற்றும் கோபிநாத் நடுவர்களாக உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திரஜா சங்கர் - கார்த்திக், மீரா கிருஷ்ணன் - சிவக்குமார், நவீன் - சவும்யா, நாஞ்சில் விஜயன் - மரியா, வீஜே ஆஷிக் - சோனு ஆகிய ஜோடிகள் ஏற்கனவே பங்கேற்று வரும் நிலையில் புது என்ட்ரியாக ஜீ தமிழ் நடிகர் புவியரசு தனது மனைவி பிரியாவுடன் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த ஜோடிகளில் புவியரசு - ப்ரியா மற்றும் நவீன் - சவும்யா ஜோடிக்கு தான் அதிக போட்டி நிலவும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.