மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

சின்னத்திரை நடிகையான ரோஷினி ஹரிபிரியன் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், இனி சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக தெரிவித்திருந்தார். அதற்கு காரணம், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததால் ஜெய் பீம் போன்ற சில ஹிட் படங்களின் வாய்ப்புகளை இழந்தது தான். அதன்பின் எவ்வளவு தீவிரமாக தேடியும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் ரோஷினிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள கருடன் படத்தில் ரோஷினி ஹரிபிரியன் நெகட்டிவ் ரோலில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ரோஷினியின் சினிமா என்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதேசமயம் ரோஷினி இதுபோல் நல்ல கதைகளை, கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்களின் அட்வைஸ் குவிந்து வருகிறது.