சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
முன்னணி சேனலான ஜீ தமிழ் தற்போது புதிய தொடர்களை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வருகிறது. முன்பு ஏராளமான டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பியது. பின்னர் நேரடி சீரியல்களுக்கு மாறியது. என்றாலும் டப்பிங் சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் வட்டம் இருப்பதால் மீண்டும் டப்பிங் சீரியல்களை களம் இறக்கி உள்ளது.
அந்த வகையில் கடந்த திங்கள்கிழமை முதல் 'நானே வருவேன்', 'லட்சுமி கல்யாணம்' என்று இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. திங்கள் முதல் சனி வரை பகல் 3 மணிக்கு 'நானே வருவேன்' சீரியலும், 'லட்சுமி கல்யாணம்' தொடர் இரவு 10.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. தொடர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவைகள் ப்ரைம் நேரத்திற்கு மாற்றப்படும் என்று தெரிகிறது. 'லட்சுமி கல்யாணம்' தொடர் ஒரு நல்ல மனிதனை வாழ்க்கை துணையாக அடைய போராடும் இளம் பெண்ணின் கதையாகவும், 'நானே வருவேன்' தொடர் முக்கோண காதல் கதையை கொண்ட தொடராவும் இருக்கிறது.