100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
நடிகை வனிதா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அனல் காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், பிக்கப் டிராப் என வரிசையாக பல படங்கள் வெளி வர உள்ளது. இந்நிலையில், அண்மையில் வனிதா அளித்த பேட்டியில் தனது மூன்றாவது திருமணம் பற்றி பேசியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது பேட்டியின் போது வனிதாவிடம் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு வனிதா, 'நான் சட்டப்படி இரண்டு திருமணம் தான் செஞ்சிருக்கேன். மூன்றாவது திருமணம் கண்டிப்பா பண்ணுவேன்' என்று நக்கலாக கூறினார். மேலும் மாப்பிள்ளையின் நிறம் குறித்து கேள்வி கேட்க, அதற்கு வனிதா குபேரன் போல பச்சையாக இருக்க வேண்டுமென சிரிக்காமல் நக்கலாக பதிலளித்ததுடன் அனைத்து பேட்டிகளிலும் என்னிடம் திருமணம் பற்றி மட்டுமே கேள்வி கேட்கிறார்கள் என்று காட்டமாகவும் பேசியுள்ளார்.