ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் முதலில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சீரியல்களில் என்ட்ரி கொடுத்தார். தங்கம், கஸ்தூரி, ராஜா ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் சப்போர்ட்டிங் கேரக்டரிலும் வில்லியாகவும் மிரட்டினார். இவருக்கு அசோகா சிண்டாலாவுடன் திருமணமாகி சித்தாரா என்ற பெண் குழந்தையும் உள்ளது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி மற்றும் மோதலும் காதலும் ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமான மகிழ்ச்சியான செய்தியை தனது கணவர் மற்றும் மகளுடன் குடும்பமாக போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதேவிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.