தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
தமிழில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் கடந்தவாரம் வெளியேற்றப்பட்டவர் ஐஷு. ஏற்கெனவே ஒரு காதலர் இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே ஒரு காதல். அந்த காதலனுக்கு கண்ணாடி லிப் லாக் முத்தம் என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இந்த நிலையில் தற்போது வெளியில் வந்திருக்கும் அவர் தனது செயல்களுக்காக மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைத்தளத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கும் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை நம்பிய அனைவருக்கும் நான் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளதாக உணர்கிறேன். இந்த நிகழ்ச்சி எனக்கு சிறந்த ஒரு வாய்ப்பை கொடுத்த போதிலும், அதனை நான் கெடுத்து விட்டேன். என்னை போன்ற பல இளம் பெண்கள் இதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இதுபோன்ற பொன்னான வாய்ப்பு கிடைத்தும் இதன் மூலம் நான் எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும், சக பெண்களுக்கும் அவப்பெயரை தேடி கொடுத்துவிட்டேன்.
என் மீது எனக்கே மரியாதை இல்லாமல் போய் விட்டது. ஒருவரை விரும்புவது, விரும்பப்படுவது, மிகவும் வெறுக்கப்படுவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய தவறான செயல்களில் இருந்து என்னை காப்பாற்ற முயன்ற யுகேந்திரன், விச்சும்மா, பிரதீப், அர்ச்சனா, மணி ஆகியோர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன். கோபம், காதல், பொறாமை, நட்பு ஆகியவை என் கண்ணை மறைத்து விட்டது.
இந்த நிகழ்ச்சியில் நீங்கள் சந்திக்கும் சக போட்டியாளரை எவ்வளவு நேசித்தாலும், மதித்தாலும், அவர்களைப் பற்றி எப்போதும் எதிர்மறையான விஷயங்களை சொல்ல வைக்கிறார்கள். இதனால் பொய் பேசும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நான் இந்த நிகழ்ச்சிக்கு தகுதியானவள் இல்லை என்பது இப்போது தெளிவாக தெரிகிறது.
நான் ஒரு பெரிய மேடையை சந்தித்தது இதுவே முதல்முறை. அதை எவ்வாறு கையாளுவது என்று எனக்குத் தெரியவில்லை. எனது குடும்பத்தை இந்த விஷயத்தில் சம்பந்தப்படுத்த வேண்டாம். இவை அனைத்திற்கும் நான் மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நிகழ்ச்சியில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
பிரதீப்பிற்கு எதிராக நான் ரெட்கார்ட் தூக்கியதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நான் உங்களுடைய நோக்கத்தை புரிந்திருந்தால், உங்களுக்கு துரோகம் செய்திருக்கமாட்டேன். மேலும், நிக்சனின் ரசிகர்களிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அங்கு நான் செய்த எந்த ஒரு விஷயத்தையும் நியாயப்படுத்த விரும்பவில்லை.
21 வயதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் நான் விளையாடிவிட்டேன். இதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எனது குடும்பத்தின் மீது கருணை காட்டுமாறும், இதில் அவர்களை ஈடுபடுத்தி பேச வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.