அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ப்ரியங்கா நல்காரி, அந்த சீரியல் முடிந்த பின் ஜீ தமிழில் சீதாராமன் தொடரில் நடித்து வந்தார். ஆனால், சீரியல் தொடங்கி சில மாதங்களில் தனது காதலர் ராகுலை திடிரென ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதன்காரணமாக சில நாட்களிலேயே சீரியலை விட்டும் விலகினார். இதனால் ரசிகர்கள் பலரும் ப்ரியங்கா இனி நடிக்கவே வரமாட்டாரா? என வருத்தமடைந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அண்மையில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தெலுங்கு கம்பேக் என ஹேஷ்டேக் போட்டிருந்தார். தற்போது மேலும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள நளதமயந்தி என்கிற சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அந்த பூஜையில் ப்ரியங்கா நல்காரியும் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார். இந்த தொடரில் ப்ரியங்காவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் நந்தா ஹீரோவாக நடிக்கிறார்.