சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிரபல சினிமா நடிகரான மாரிமுத்து வெள்ளித்திரையில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றதுடன், சின்னத்திரையிலும் எண்ட்ரி கொடுத்து டிரெண்டிங்கில் இடம்பிடித்துவிட்டார். எதிர்நீச்சல் தொடரில் அவர் நடித்து வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவதால், சின்னத்திரையிலும் அவருக்கு பெரிய மார்க்கெட் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், மற்ற சேனல்களும் ஆதிகுணசேகரனின் டி.ஆர்.பி மார்க்கெட்டை தங்களது சேனலுக்கு பயன்படுத்த பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடிகர் மாரிமுத்து ஜோதிடர்களுக்கு எதிராக பேசிய சர்ச்சையான கருத்து வைரலாகி அந்நிகழ்ச்சியின் டிஆர்பி எகிற செய்தது. தற்போது அதேபோல விஜய் டிவி தரப்பிலும் ஸ்டார் மியூசிக் என்ற கேம் ஷோவில் சினி அப்பாஸ் சினி அம்மாஸ் என்ற ஸ்பெஷல் எபிசோடில் நடிகர் மாரிமுத்துவை கலந்து கொள்ள செய்துள்ளனர். அதன் புரோமோவை பார்க்கும் ரசிகர்கள் 'இந்த டிவியில யாரை வம்பிழுக்க வந்திருக்கீங்க குணசேகரன்?' என காமெடியாக கலாய்த்து வருகின்றனர்.