சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் கனா காணும் காலங்கள் வெப் தொடரின் இரண்டாவது சீசன் அண்மையில் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது. பல புதிய நடிகர்கள் அறிமுகமாகியுள்ள இந்த சீசனில், மதன் என்ற கதாபாத்திரத்தில் நரேஷ் என்ட்ரி கொடுத்துள்ளார். சில எபிசோடுகளிலேயே இவருக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. நரேஷ், மாதவி என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், தற்போது இருவருக்கும் கோலகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இதில் கனா காணும் காலங்கள் வெப் தொடரில் நடிக்கும் பல நட்சத்திரங்கள் இந்த நிச்சயதார்த்ததில் பங்கேற்று உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே, இதே தொடரில் அபி-கவுதம் கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபிகாவுக்கும் ராஜ வெற்றி பிரபுவுக்கும் அண்மையில் தான் திருமணம் நடந்து முடிந்தது. அவர்களை தொடர்ந்து நரேஷின் திருமணம் தான் அடுத்ததாக நடைபெற உள்ளது என நரேஷ் மாதவி ஜோடியை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.