டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை சோனா. அவரது நடிப்பை பாராட்டி நடந்து முடிந்த ஜீ தமிழ் குடும்ப விருது விழாவிலும் சிறந்த வில்லிக்கான விருது சோனாவிற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகையுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சோனா அந்த சீரியலை விட்டு விலகிவிட்டார். இதனையடுத்து சோனா நடித்து வந்த தாரா கதாபாத்திரத்தில் நடிகை சாதனா நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார். சினிமாவில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற சாதனா சின்னத்திரையில் 'தென்றல்' தொடரின் மூலம் அறிமுகமானார். அதில் வில்லியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்ற அவர் தற்போது மாரி தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.




