ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
நடிகர் வேணு அர்விந்த் சின்னத்திரையில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தார். கடைசியாக ராதிகா சரத்குமார் தயாரித்த சந்திரகுமாரி சீரியலில் நடித்த்ருந்தார். அதன்பின் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த வேணு அர்விந்த், கடைசி 4 வருடங்களில் எந்த பிராஜெக்ட்டிலும் கமிட்டாகவில்லை. இந்நிலையில், அவர் தற்போது ராதிகா சரத்குமார் தயாரிப்பில் அதிக எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 'கிழக்கு வாசல்' தொடரில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
இதுகுறித்து வேணு அர்விந்த் கூறிய போது, 'நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் நடிக்க வருகிறேன். பல ஆண்டுகளுக்கு பின் ராதிகா சரத்குமாருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது' என கூறியுள்ளார். கிழக்கு வாசல் தொடரில் ராதிகாவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட் ரெங்கநாதன், தினேஷ், ரேஷ்மா என பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில், வேணு அர்விந்தின் எண்ட்ரி ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.