2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பேக்ரவுண்டில் பாடல்கள், வசனங்கள், கவுண்டர்களை போட்டு மக்களை ரசிக்க செய்து வருகிறார் டீஜே ப்ளாக். இவரை வைத்து சில பிராங்க் நிகழ்ச்சிகளை செய்து விஜய் டிவியும் டிஆர்பியை தேத்தி வருகிறது. இதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள டீஜே ப்ளாக் செலிபிரேட்டியாக வலம் வர ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், புதிதாக கார் வாங்கியுள்ள டீஜே ப்ளாக் தனது கனவு நினைவான சந்தோஷத்தில் 'ஓலா காரிலிருந்து ஓன் கார்' என எமோஷனாலான வீடியோவை வெளியிட்டுள்ளார். டீஜே ப்ளாக்கின் இந்த சந்தோஷமான தருணத்தில் அவரை தம்பியாக நினைக்கும் மாகபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா ஆகியோர் உடனிருந்து வாழ்த்தியுள்ளனர்.
ஹூண்டாய் நிறுவனத்தின் எஸ்யூவி ரக காரை டீஜே ப்ளாக் வாங்கியுள்ளார். இதுபோல டீஜே ப்ளாக்கின் அனைத்து கனவுகளும் நினைவாக வேண்டுமென ரசிகர்கள் உட்பட பல தொலைக்காட்சி நண்பர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.