ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
நடிகர் தர்ஷன் தமிழில் ரஜினி முருகன், கனா, தும்பா, துணிவு ஆகிய படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானர். தர்ஷனுக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் உள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தர்ஷன் என நினைத்து சோஷியல் மீடியா போலி ஐடியில் ஒருவருடன் பேசி வந்துள்ளார். அவர்களின் நட்பு படிப்படியாக வளர்ந்து வாட்ஸ்அப் வரை சென்றுள்ளது.
தர்ஷன் தான் என நினைத்த அந்த பெண் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். ஆனால், அதன்பிறகு அந்த பெண்ணின் புகைப்படங்களை மார்ப் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி 2லட்சம் ரூபாய் பணம் கேட்டு மோசடிக்காரன் மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து அந்த பெண்ணும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து மிரட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் விசாரனையை தொடங்கிய போலீசார், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அலாவுதீன், வாகித் என்பவர்கள் தான் அந்த போலி ஐடியை உருவாக்கியதை கண்டுபிடித்துள்ளனர். சகோதரர்களான இவர்கள், அந்த போலி ஐடியின் மூலம் அந்த பெண்ணிடம் மாறி மாறி பேசி பணம் மோசடி செய்துள்ளனர் என்பதும் விசாரனையில் தெரியவந்தது. இதனையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.