லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
உலகெங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனிரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. தமிழிலும் விஜய் டிவி 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக எப்போதுமே எதிர்கருத்துகளும், விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று போராட்டங்களும், வழக்குகளும் தொடரப்பட்டது.
இந்நிலையில், நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6-ல் அசீமின் வெற்றி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதன்பொருட்டு சோஷியல் மீடியாவிலும் மோதல்கள் நடைபெற்று வருகிறது. அதன் நீட்சியாக ஜோ மைக்கேல் பிரவீன் என்னும் நபர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் தனது மனுவில், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப பிசிசிசி (பிராட்காஸ்ட் கண்டண்ட் கம்ப்ளைண்ட் கவுன்சில்) சான்றிதழ் வழங்கியுள்ளதா? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதா? பிக்பாஸ் சீசன் 1 முதல் 6 வரையிலும் நிகழ்ச்சிக்கு எதிராக ஏதாவது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளதா? பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகள் முறையாக பதிவு செய்யப்பட்டதா?. ஒவ்வொரு வார இறுதியிலும் எதன் அடிப்படையில் எலிமினேஷன் நடந்தது?. சீசன் 6 வெற்றியாளர் எதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டார்?. அசீம் பெற்ற வாக்குகள் எத்தனை?. எதன் அடிப்படையில் விக்ரமன் ரன்னராக அறிவிக்கப்பட்டார்?. அசீமுக்கும் விக்ரமனுக்கும் இடையே எத்தனை வாக்குகள் வித்தியாசம்?. என அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பி மிரள வைத்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள ஆர்.டி.ஐ படிவத்தின் புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.