பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் டாப் நடன இயக்குநர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் பணிபுரிந்துள்ளார். தவிரவும், சொந்தமாக நடனபயிற்சி பள்ளியும் நடத்தி வருகிறார். சாண்டியின் இரண்டாவது மனைவி சில்வியாவும், அவரது தங்கை சிந்தியாவும் கூட நடன கலைஞர்கள் தான். எனவே, சாண்டி மாஸ்டர் அடிக்கடி சில்வியா மற்றும் சிந்தியாவுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவார்.
அந்த வகையில் சாண்டி மாஸ்டர் மச்சினிச்சி சில்வியாவுடன் சேர்ந்து கொண்டு நடிகர் விஜய்யின் சூப்பர்ஹிட் மெலோடி பாடலான 'சொல்லாமலே யார் பார்த்தது' பாடலுக்கு பல பாடல்களில் விஜய் ஆடிய சிக்னேச்சர் ஸ்டெப்புகளையே ஸ்டைலாக போட்டு சூப்பரான நடன வீடியோவை வெளியிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு படத்தின் முக்கிய பாடல்களான 'அரபிக்குத்து' மற்றும் 'ரஞ்சிதமே' பாடல்களுக்கு கொரியோகிராபி சரியில்லை. சாண்டி மாஸ்டரையே கொரியோகிராபராக போட்டிருக்கலாம் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் பேசி வந்தனர். அதை நிரூபிப்பது போல் சாண்டி மாஸ்டர் நடன வீடியோ உள்ளது. மேலும், தளபதி 67 படத்தில் சாண்டி மாஸ்டர் ஏற்கனவே நடிகராக கமிட்டாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




