எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் | விதி எப்போதும் மாறாது: ஜெயம் ரவி | ஒரு நேர்மையாளனின் கதை - மனம் திறந்த நந்தா பெரியசாமி | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “ஒருதலை ராகம்” | 2024 - முத்திரை பதித்த முத்துக்கள்... | தாயைக் காத்த தனயன், உரியடி, பைரவா - ஞாயிறு திரைப்படங்கள் | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா |
சின்னத்திரை நடிகரான அர்னவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் கதாநாயகானாக நடித்து வந்தார். அர்னவ்வின் மனைவியும், சின்னத்திரை நடிகையுமான திவ்யா ஸ்ரீதர், அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக சமீபத்தில் போலீஸில் புகார் அளித்திருந்தார். காவல்துறை அர்னவை கைது செய்த நிலையில், நீதிமன்றம் அர்னவ்வை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இதற்கிடையில் அர்னவ் செல்லம்மா சீரியலை விட்டு விலகிவிட்டதாகவும், அவருக்கு பதில் வேறொரு நடிகர் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. தற்போது ஜாமீன் கிடைத்து வெளிவந்துள்ள அர்னவ், செல்லம்மா சீரியலில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் தனது இண்ஸ்டாகிராமில் 'காதலோடு வாழும் வாழ்க்கை ஒருபோதும் சலிக்காது' என்ற கேப்ஷனுடன் தனது கம்பேக்கை உறுதி செய்துள்ளார்