100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
பிக்பாஸ் சீசன் 6 அறிவிப்பு வெளியானதிலிருந்து ஜி.பி.முத்துவின் மேல் தான் பலரும் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். அதற்கேற்றார்போல் முதல் வாரம் முழுவதுமே பிக்பாஸ் வீடு வேற லெவலில் கலகலப்பாக இருந்தது. அதற்கான மொத்த காரணமும் ஜி.பி. முத்து என்றே சொல்லலாம். பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்கிற தகுதி அவர் ஒருவருக்கே என்று மக்களே அவருக்கு டைட்டில் பட்டம் சூட்டிவிட்டனர்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜி.பி.முத்து தன் மகனுக்காக பிக்பாஸ் வீட்டை விட்டு அடம்பிடித்து வெளியேறினார். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் வருத்தமடைந்தாலும், ஜி.பி.முத்துவை பாரட்டியும் வருகின்றனர். அதிலும் சில பிரபலங்கள் ஜி.பி. முத்துவின் துணிச்சலான செயலை பாராட்டி சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனுராமாசாமியும் ஜி.பி. முத்துவை புகழ்ந்து பாராட்டியுள்ளார். அதில், 'வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸ் 6-லிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜி.பி.முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்' என்று கூறியுள்ளார்.