இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் புகழ் பெற்றவர் ரவிச்சந்திரன் . பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் தெலுங்கு, தமிழில் தயாராகும் வாரிசு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறிய கேரக்டர்தான் என்றாலும் விஜய் படம் என்பதால் மிகுந்த நம்பிக்கையோடு படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருக்கிறார்.
நடிக்க வேண்டிய அன்று படப்பிடிப்புக்காக காத்திருந்தபோது இவரை பார்த்த இயக்குனர் வம்சி. இவர் நான் நினைத்திருக்கும் கேரக்டருக்கு பொருந்த மாட்டார். கொஞ்சம் ரிச்சாக தெரிகிறார். இவரை ஏழையாக நடிக்க வைக்க முடியாது, வேறு நடிகரை ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் இதுகுறித்து விஜய்யை சந்தித்து முறையிட முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்கு படக்குழுவினர் அனுமதிக்கவில்லை. அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். என்றாலும் விஜய் படத்தில் நடிக்க முடியாமல் போன ஏமாற்றத்தை நண்பர்களிடம் வேதனையோடு பகிர்ந்து வருகிறாராம் ரவிச்சந்திரன்.