நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சின்னத்திரை நேயர்களுக்கு மிகவும் பரிட்சயமான முகம். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சில நல்ல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். தற்போது சொந்தமாக யூ-டியூப் சேனல் வைத்திருக்கும் ஜேம்ஸ் வசந்தன் டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடக்கும் சில தவறுகளை சுட்டிக்காட்டியும், நல்ல விஷயங்களை பாராட்டியும் பேசி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி வந்துவிட்டாலே ரசிகர்கள் பலரும் ஜேம்ஸ் வசந்தனின் கருத்தைக் கேட்க அவரது சோஷியல் மீடியாவுக்கு படையெடுத்து விடுவார்கள். இந்நிலையில், அவர் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கடுமையாகவிமர்சித்துள்ளார். சமீபத்தில் ஒளிபரப்பான அந்நிகழ்ச்சியில் ரிஹானா என்ற சிறுமி 'கருத்தவென்லாம் கலீஜா' என்ற பாடலை பாடினார். அதில் ஒரு பல்லவியில் தக்காளி என்ற வார்த்தை வரும். விவரம் அறியாத அந்த சிறுமியும் தக்காளி என்ற வார்த்தையை பாடகரை போலவே பாடுகிறார்.
இதுகுறித்து பேசியுள்ள ஜேம்ஸ் வசந்தன், அது ஒரு கெட்டவார்த்தையின் இணைச்சொல் என்பது எல்லா ஆண்களுக்கும் தெரியும். அந்த பிஞ்சு உதடுகள் அதை பாடும் போது எனக்கு திக்கென்று இருக்கிறது. கெட்ட வார்த்தைகளை பாடித்தான் பிழைப்பு நடத்த வேண்டுமா?' என கடுமையாக பேசியுள்ளார்.